Friday, 14 February 2014

காதல் எனப்படுவது யாதெனில்...




                              

                     

                   வானம் தூறிக் கொண்டிருந்தது. அதன் அடையாளமாய் ஜன்னல் கம்பிகளில் மழைத்துளி கோர்த்திருந்தது. விடிய தொடங்கி இருக்க வேண்டும். குளிருக்கு இதமாய் போர்வையை இழுத்து போர்த்தி தூங்க முயன்றேன்.


                                                   "என் காதல் சொல்ல நேரமில்லை,
                                                     உன்காதல் சொல்ல தேவையில்லை,
                                                     நம் காதல் சொல்ல வார்த்தையில்லை,
                                                     உண்மை மறைத்தாலும் மறையாதடி"

                          செல்போனில் ரிங்டோன் சிணுங்கியது.அம்மா தான் அழைக்கிறாள். தூக்கம் கலைந்த கடுப்பில் காதில் வைத்து சொன்னேன் "ம். சொல்லும்மா".

                        "ஏன்டா.. இன்னுமா தூங்கிகிட்டு இருக்க. புது கம்பனிக்கு வேலைக்கு போற. சீக்கிரம் கிளம்ப வேண்டாமா" என போனில் அம்மாவும் அட்வைஸ் மழை பொழிந்தாள்.

                      "சரிம்மா.. கிளம்புறேன்" அலுப்புடன் பெட்டில் இருந்து எழுந்து கொண்டே சொன்னேன்.

                     "சீக்கிரம் கிளம்பு.. போகும்போது சாமி கும்பிட்டுட்டு போ" அம்மா எப்போதும் சொல்லும் வார்த்தையை சொன்னாள்.

                    "சரிரிரி..." என்று சொல்லி போன் காலை கட் செய்தேன்.

                 


             என்னப்பத்தி இப்ப சொல்லி ஆகணும். என்பேரு கார்த்திக். சென்னைல சாப்ட்வேர் இன்ஞ்ஜினியரா வொர்க் பண்றேன். இப்ப வேற கம்பெனில இதவிட அதிகமா சம்பளம் கிடைத்ததால் இன்று புது கம்பெனியில் ஜாயின் செய்ய போகிறேன். எனக்கு சொந்த ஊர் மதுரை.  அப்பா அம்மாக்கு நான் ஒரே பையன்.ரொம்ப ஜாலியானது எங்க பேமிலி. இன்றோடு குடும்பத்தை விட்டு பிரிந்து 6 வருடமாகிறது.

                  வீட்டுக்கும் எனக்கும் எதாவது பிரச்சனையானு கேட்குறிங்களா? அது தான் இல்ல.4 வருஷம் கோயம்பத்தூர்ல படிப்பு. 2 வருஷம் சென்னைல வேலைனு வீட்டுக்கு அப்பப்ப கெஸ்ட் மாதிரி தான் போய் வருகிறேன்.

                 நுங்கம்பாக்கத்துல ஒரு மான்சன்ல தங்கி இருக்கேன். பழைய கம்பெனி பக்கத்துலயே இருந்ததால பைக்குல போயிடுவேன். புது கம்பெனி வேளச்சேரியில் இருந்ததால் இனிமே சீக்கிரம் எழுந்து கிளம்ப வேண்டும். போனில் நேரத்தை பார்த்தேன். 6 மணி ஆகிறது. குளித்து முடித்துவிட்டு பேக்கில் இருந்த ஒன் மேன் ஷோவை அடித்தேன் . ஸ்பா ன்சர்:சண்முகம் அண்ணா.
                                                                 

      சண்முகம் அண்ணா என்னோட ரூம் மேட். MBA படித்துவிட்டு இங்கே ஒரு பிரைவேட் பாங்கில் மேனேஜராக வேலை செய்கிறார். இன்னும் தூங்கி எழவில்லை. என்னை விட வயதில் பெரியவர் ஆதலால் "அண்ணா " என்றே அழைத்து பழகிவிட்டேன். நான் சீக்கிரமே கிளம்புவதை போர்வையை விலக்கி பார்த்தார். நான் விசிலடித்து கொண்டே தலை சீவி கொண்டு இருந்தேன்.

          "சண்முகம் அண்ணா , இன்னைக்கு நான் ரொம்ப அழகா இருக்கேன்ல.." தூங்கி கொண்டு இருந்த சண்முகம் அண்ணாவிடம் கேட்டேன். அவர் ஏதோ அசிங்கமாய் சொல்ல வந்தார்.

         "OK OK. நான் அழகுதான். சும்மா உங்ககிட்ட கேட்டேன்"என்றேன். "ஏய்.. கடுப்பாயிடுவேன். சீக்கிரம் லைட் ஆப் பண்ணிட்டு கெளம்பு. அப்பா!! இந்த சாப்ட்வேர்  இஞ்சினியருங்க தொல்ல தாங்கலடா" செம கடுப்பில் சொன்னார்.

இதற்க்கு மேல் அங்கு இருந்தால் அடிவிழுமோ என்று சிரித்து கொண்டே நகர்ந்தேன்.


     நான் அழகுதாங்க (நீங்க காரிதுப்புறது கேக்குது). ஓரளவுக்கு நார்மலான தமிழ் பையன். போதுமா.. நான் சீக்கிரமே மெஸ்சுக்கு வந்ததை மெஸ் அக்கா பார்த்தார்.
 

        "என்ன கார்த்தி இன்னைக்கு சீக்கிரமே கெளம்பிட்ட.."



        "இல்ல அக்கா. இன்னைக்கு புது கம்பனிக்கு போறேன்ல இனிமே சீக்கிரமாவே வந்துடுவேன்." என சொல்லி கொண்டே 4 இட்லிகளை உள்ளே தள்ளினேன்.



      சாப்பிட்டு முடித்துவிட்டு பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றேன். காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளையும், கல்லூரிக்கு செல்லும் பிகர்களையும் பார்த்து கொண்டு இருந்தேன்.



       "சே! இவ்வளவு நாளா காலேஜ் பிகர்களை பார்ப்பதை மிஸ் பண்ணிடோமே" என்று வருத்தப்பட்டு கொண்டேன்.



       8 மணிக்கு சரியாக எங்கள் கம்பெனி வேன் வந்தது. அப்பொழுது எனக்கு போனில் காலும் வந்தது. வினோத் கால் செய்கிறான்.வினோத் என்னோட பழைய கம்பெனியில் எனக்கு ஜூனியர். நல்ல திறமையான பையன்.


     "ஹல்லோ வினோத்.. எப்டி இருக்க."

     "ம். நல்லா இருக்கேன் அண்ணா, எந்திரிசிடிங்களா?"

     "எந்திருச்சி கிளம்பி பஸ் ஸ்டாப்ல நிக்கிறேன்"

     "! இன்னைக்கு புது கம்பெனியில ஜாயின்  பண்றிங்கள்ள.. ஆல் தி பெஸ்ட் அண்ணா".

     "தேங்க்ஸ் டா " என்று சொல்லி கொண்டே வேனில் ஏறினேன்.

     "அண்ணா.. நம்ம ஹெல்த் கேர் ப்ராஜெக்ட்ல கிளைன்ட் இஸ்யூ போட்டு இருக்காங்க. எப்டி பிக்ஸ் பண்றதுன்னு தெரியல"



     "! என்ன ப்ராப்ளம் டா." நான் கேட்டு கொண்டே சீட் இருக்கிறதா என தேடி பார்த்தேன். பெரும்பாலும் எல்லா சீட்டிலும் ஆட்கள் இருந்தார்கள். நடுவில் இரண்டு சீட் இருந்தது. இரண்டிலுமே ஜன்னலோரமாய் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். நான் போன் பேசி கொண்டே ஒரு சீட்டில் அமர்ந்தேன்.



     "Excuse me" யாரோ ஒரு அழகான பெண் என்னிடம் கூறினாள் .



     "Yes" நான் போனை காதில் இருந்து எடுத்துவிட்டு கேட்டேன், "ஏன் மேடம் என்கிட்ட மன்னிப்பு கேக்குறிங்க".



     "எப்போ? அவள் என் முகத்தை பார்த்து கேட்டாள் .

     "இப்ப நீங்க தானே என்கிட்ட Excuse meனு கேட்டிங்க".

     "ஹலோ! என்ன நக்கலா? இது லேடீஸ் சீட்".

     "என்னது லேடீஸ் சீட்டா? இது ஒன்னும் கவர்மெண்ட் பஸ் இல்லையே"

     "ஹலோ! நீங்க பாட்டுக்கு சீட் இருக்குதுன்னு பொண்ணுங்க பக்கத்துல உட்கார்றிங்க"

     "வினோத் நான்  5 மினிட்ஸ் கழிச்சு கூப்பிடுறேன்" என்று சொல்லி காலை கட் செய்தேன்.

     "ஹலோ! ஏங்க பொண்ணுங்க பக்கத்துல உட்கார கூடாதா, டிரைவர் நீங்க இத கேக்க மாட்டிங்களா " என்று வேன்  டிரைவரை பார்த்து கத்தினேன்.

    "சார் அவங்க அப்டித்தான். நீங்க வேற சீட்ல உட்காருங்க"ன்னு சிரிச்சிகிட்டே சொன்னார்.

  முதல் நாளே puppy shame ஆன கடுப்பில் வலது பக்க சீட்டை பார்த்தேன்.

  அங்கே ஒரு பிகர் 5 அடி நமீதா மாதிரி இருந்தாள். "Please sit here" என்று சிரித்து கொண்டே இடம் கொடுத்தாள்.நான் அவள் அருகில் அமர்ந்து கொண்டு "தேங்க்ஸ்" என்றேன்.

    "Its OK" என்று சிரித்து கொண்டே சொன்னாள்.நான் இப்பொழுது எனக்கு இடது புறம் இருந்த சீட்டை பார்த்தேன். அவள்  ஜன்னலோரமாய் முகத்தை திருப்பி கொண்டாள் .
  

   அப்பொழுது வினோத்திடம் இருந்து மீண்டும் போன் கால் வந்தது. நான் போனிலேயே இஸ்யூ பிக்ஸ் செய்வதற்கான வழிகளை சொல்லிக்கொண்டு இருப்பதை வாய் பிழந்து பார்த்து கொண்டு இருந்தாள் 5 அடி நமீதா. போன் பேசி முடித்ததும் இயல்பாக கை குலுக்கினாள். "I am  பூஜா, ஜூனியர் ப்ரோக்ராமர். இங்க 1 இயரா வொர்க் பண்ணிட்டு இருக்கேன்."



    "I am கார்த்திக்.நானும் ப்ரோக்ராம்மர் தான்.இன்னைக்கு தான் புதுசா ஜாயின் பண்றேன்".


     "Nice to meet you" என சொல்லி கையை விடுவித்தாள்.

   வேன்  இப்பொழுது கிண்டியை தாண்டி போய் கொண்டு இருந்தது. ரஷ் ஹவர். அதனால் டிராபிக் அதிகமாய் இருந்தது. டிரைவர் அடிக்கடி பிரேக் போட நமிதா  என் மீது அடிக்கடி உரசினாள். கம்பெனி வந்ததும் "ஐயையோ! போதும்டா சாமி" என முதல் ஆளாய் இறங்கினேன்.

   வேளச்சேரி விஜயாநகர் பேருந்து நிலையம் அருகே 8 மாடியுடன்  உயர்ந்து நின்றது கம்பெனி. நான் கம்பெனிக்குள் சென்று HRஐ பார்த்து பேசினேன். ஏற்கனவே இண்டர்வியூவில் பார்த்து இருந்ததால் என்னை பார்த்தவுடன் "வெல்கம் மிஸ்டர்.கார்த்திக்" என்று கூறி கைகுலுக்கினார். பின் என்னுடைய டீம் இருந்த இடத்திற்கு அழைத்து சென்று என்னுடைய இடத்தில அமர வைத்தார்.

   முதல் நாள். ஆதலால் கம்பெனி Procedure fileஐ கொடுத்து படிக்க சொன்னார். நான்  5 நிமிடம் புரட்டி விட்டு மூடி வைத்தேன்.மற்றவர்கள் மற்றவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று கேபினை விட்டு எட்டி பார்த்தேன். எல்லோரும் பிஸியாக வேலை செய்து கொண்டு இருந்தார்கள்.

   நான் சிஸ்டத்தை ON செய்து மெயில் செக் செய்தேன். கொஞ்ச நேரம் facebookஇல் நண்பர்களுடன் chat  செய்து கொண்டு இருந்தேன்.

   சிறிது நேரம் கழித்து HR வந்து ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார். "ஹாய் கார்த்திக், எப்டி கம்பெனி எல்லாம் புடிச்சிருக்கா" என நலம் விசாரித்தார். "

      "Fine  sir" என்று கூறி சிரித்து வைத்தேன்.

      "இவர் Mr.சுப்பிரமணியன்.ப்ராஜெக்ட் லீட்.இவர்கிட்ட தான் நீங்க ட்ரைனிங் எடுத்துக்க போறீங்க" என ஒருவரை காட்டினார். அவர் பார்ப்பதற்கு நடிகர் சத்யன் போல் இருந்தார்.

       "ஹாய் கார்த்திக்" என கீச்சிடும் குரலில் கூறினார்.

                                       


      ஆஹா! அப்டியே சத்யன் தான். ஆள் பார்ப்பதற்கு நல்ல அம்மாஞ்சி மாதிரி இருந்தார். முன்னே தள்ளி கொண்டு இருந்த தொப்பையை மறைக்க விறைப்பாய் நின்று பேசி கொண்டிருந்தார்.

      "உங்கள பத்தி HR  சொன்னாரு. இண்டர்வியூல கொடுத்த டாஸ்க் எல்லாம் சீக்கிரமாவே முடிச்சிடிங்களாமே. Very  good கார்த்திக். ஒன் வீக் ட்ரைனிங் எடுத்துகோங்க. சும்மா,கம்பெனியோட ப்ரோசஸ் புரிஞ்சிகிரதுக்கு தான். ற்றைன்னிங் முடிஞ்சதும் ப்ராஜெக்ட்க்கு போயிடலாம்" என எச்சிலை ஸ்ப்ரே செய்து  கொண்டே கூறினார்.
 



     நான் சிரிப்பை அடக்கி கொண்டே கேட்டு கொண்டேன்.



     அவர்கள் போனவுடன் நொந்து கொண்டேன். "என்னடா இது! புதுசா வந்துருக்கோம். டீம் மெம்பர்ஸ் கிட்ட ஒரு intro கூட கொடுக்கல. என்ன கொடும சார் இது".

          facebook chatஐ தொடர்ந்தேன்.மதியம் லஞ்ச்க்கு கேன்டீன் வந்தேன்.  பெரிய கியூவே நின்றது. நான் தயங்கியபடி நிற்பதை கியூவின் முன்னால் இருந்த சுப்பிரமணி பார்த்து கை அசைத்தார்.

        "என்ன சாப்பிடவந்தீங்களா?" என அறிவாளிதனமாய் கேள்வி கேட்டார். மதிய நேரத்தில் கேன்டீனில் பிஸ் அடிக்கவா வருவார்கள்.

       "எஸ் சார்" என சிரித்து கொண்டே சொன்னேன். "மீல்ஸ், வெரைட்டி ரைஸ், சப்பாத்தி. என்ன சாப்பிடுறிங்க" என கேன்டீன் சப்ளையர் போலவே கேட்டார்.

       "2 சப்பாத்தி" என்றேன். "OK, நானே வாங்கிடுறேன்" என அவருக்கும் எனக்கும் சேர்த்து வாங்கினார். நான் காசை எடுத்து நீட்டியதும், "No கார்த்திக். என கூறி வாங்க மறுத்து விட்டார்.

    நான் நன்றியுணர்வுடன் "Thanks sir" என்றேன்.  "No கார்த்திக். இனிமே என்னை சார்னு கூப்பிடாதிங்க. சுப்பிரமணினே கூப்பிடுங்க. அது தான் ப்ரோபஷனலாய் இருக்கும்" என்றார். நான் "OK சார்" என்றேன்.

       "பார்த்திங்களா ..  மறுபடியும் சார்னு கூப்பிடுறிங்க".

       "சாரி. Mr.சுப்பிரமணியன்" எனக்கூறி மழுப்பினேன்.

       "நம்ம கேன்டீன்ல எல்லாமே வெல ஜாஸ்தி. 2 சப்பாத்தி 30 ருபீஸ் சொல்றான்" என புலம்பினார். இதற்கு பேசாமல் நீ என்னிடம் காசே வாங்கி இருக்கலாம் என்று சொல்ல தோன்றியது.

    இதுக்கு முன்னாடி நான் வொர்க் பண்ண கம்பெனில லஞ்ச் ப்ரீ தெரியுமா. நானெல்லாம் புல் கட்டு கட்டுவேன்"  என சொல்லி தொப்பை குலுங்க சிரித்தார். கொஞ்ச நேரம் முன்னாடி ப்ரோபஷனலிசம் சொல்லிதந்த சுப்ரமணியா இவர் என எண்ணி நொந்து தலையில் கையை வைத்துக்கொண்டேன்.

   அப்போது அவள் எங்களை கடந்து போனாள். நான் அவளையே பார்த்து கொண்டு இருப்பதை சுப்பிரமணி பார்த்தார்.

     "காலைல நல்லா பல்பு வங்குனிங்க போல" .

    "எத சொல்றிங்க" என அப்பாவியாய் கேட்டேன். காலைல தீபிகா  பக்கத்துல உட்கார்ந்து திட்டு வாங்குனிங்கலே அத சொன்னேன்". அவர் சொல்லித்தான் அவள் பெயர் தீபிகா என்பதை தெரிந்து கொண்டேன்.

    "அவங்க எங்க ஏரியா தான், அண்ணா நகர். ஐயர் வீட்டு பொண்ணு கார்த்திக்"

   "பேசுறத பார்த்தா அயோத்தி குப்பம் ரவுடி மாதிரி பேசுறாங்க".

   "அவங்க அப்டித்தான்.ரொம்ப ஸ்ட்ரிக்ட் அண்ட் பெர்பெக்ஸனிசட் " என்று தீபிகா  புராணத்தை அளந்தார். அவள் ஒரு மூலையில் தன தோழிகளுடன் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.

   "உனக்கு ஒரு நாள் இருக்குடி" என மனதில் கருவிக்கொண்டு சப்பாத்தியை பிய்த்து கொண்டு இருந்தேன்.

தொடரும்...

 
 

2 comments:

  1. nice 1 sathish!!!!! try to take short flim

    ReplyDelete
    Replies
    1. Thanks Sasi!!! Short film..athukku heroine ellam venumae??... Paarkkalam..;-)

      Delete